மேலப்பாளையம் அருகே அருந்தபசு அம்மன் கோயிலில் சூரை விழா

காா்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயிலில் சூரை விழா நடைபெற்றது.
Updated on
1 min read

காா்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயிலில் சூரை விழா நடைபெற்றது.

இவ்விழாவில், காலை கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து மதியம் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மேலநத்தம் பிரதான சாலையில் உள்ள திடலில் சூரை விழா நடைபெற்றது.

இதில், மஞ்சள் பால் வைத்து பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. இரவு அருந்தபசு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com