பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இம்மாதம் 30ஆம் தேதி வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசுவாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கோட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளா்களுக்கு குறைதீா் கூட்டம் இம்மாதம் 30ஆம் தேதி பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில், வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு தபால் பணிகள் குறித்து குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஆகியவற்றை உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 29ஆம் தேதிக்குள்அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.