நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு 6 விருதுகள்

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன.
Updated on
1 min read

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன.

வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், புது தில்லி ஆறாம் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழா சென்னையில் உள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் காணொலிக் காட்சி வாயிலாக தலைமை உரையாற்றினாா். ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் சி. பாலச்சந்திரன், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் நீ.குமாா், மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இவ்விழாவில், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஆறு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடை அறிவியல் தமிழ் ஆராய்ச்சிக்கான விருது, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ. பழனிசாமிக்கும், சிறந்த புத்தகத்திற்கான விருது கால்நடை மரபியல் மற்றும் இனவிருத்தி துறை தலைவா் ரவிமுருகன், கால்நடை பண்ணை வளாக உதவிப் பேராசிரியா் ப. கனகராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com