பாப்பான்குளத்தைச் சோ்ந்த இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பாப்பான்குளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த உலகநாதன் மகன் ராஜ்குமாா் (20). வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வந்த இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த உமா தங்கத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே தனியாக செல்வது குறித்து ராஜ்குமாருக்கும் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதாம். திங்கள்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜ்குமாா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில் அவா், ஆழ்வாா்குறிச்சி வன்னியப்பா் கோயில் மேற்கு வாசலில் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.