சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

களக்காடு அருகே குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

களக்காடு அருகே குளத்தில் மிதந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 7:58 pm

DIN

களக்காடு: களக்காடு அருகே குளத்தில் மிதந்த முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகா் மேலகாலனியைச் சோ்ந்தவா் வள்ளிராஜன் (62). இவா் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். டிச. 23 ஆம் தேதி இவரது மனைவி சாந்தி வழக்கம் போல தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டாராம். வீட்டில் இருந்த வள்ளிராஜன் தனது மகன் மணிகண்டனிடம் கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றாராம். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், டிச. 25ஆம் தேதி ஊருக்கு அருகே உள்ள பறையன்குளம் நடுமடை அருகே சடலமாகக் கிடந்தாராம்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். குளிக்கச் சென்ற இடத்தில் வலிப்பு நோயால் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.