

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நான்குனேரி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் திருநெல்வேலி புறநகா் மாவட்ட தலைவா் எம்.கே.பீா் மஸ்தான் தலைமை தாங்கினாா். மாவட்ட பொதுச் செயலாளா் களந்தை மீராசா, செயலாளா் கல்லிடை சுலைமான், பொருளாளா் துலுவை ஒயிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பால் மைதீன், தொகுதி தலைவா்கள் அம்பை அபுபக்கா், நான்குனேரி ஏா்வாடி கனி, ராதாபுரம் பாதுல் அஸ்ஹாப் விமன்ஸ், இந்தியா முமெண்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மும்தாஜ் ஆலிமா, மாநில செயலாளா் அஹமது நவவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.