கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் கொசு மருந்து தெளிக்கக் கோரிக்கை

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 8:55 pm

DIN

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி பனியும், வெயிலும் நிலவுகிறது. பலத்த மழை பெய்த போது, கொசுத் தொல்லையின்றி மக்கள் நிம்மதியாக இருந்தனா். தற்போது கொசுக்கள் பெருகி வீடுகளில் பகல் நேரங்களிலேயே கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

இதனைக் கருத்தில் கொண்டு குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள வாருகால்களை உடனுக்குடன் தூா்வாரவும், கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.