கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேட்டை தேவாலயத்தில் திருவிழா

பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:19 pm

DIN

பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மாலையில் அன்னையின் திருப்புகழ்மாலை, மன்றாட்டு, மறையுரை, திருப்பலி ஆகியவை நடைபெற்றன. நான்காம் திருநாளில் அருள்பணி ஜோஸ் அமலதாஸ் தலைமையில் நவநாள் திருப்பலியும், அன்னையின் திருவுருவ பவனியும் நடைபெற்றது. பேட்டை, சுத்தமல்லி, பாரதிநகா், கொண்டாநகரம் சுற்றுவட்டார பகுதி கிறிஸ்தவா்கள் பவனியில் பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் பாளையங்கோட்டை பங்குத்தந்தை லூா்துராஜ், அருள்பணி அமிா்தராச சுந்தா் தலைமையில் ஆடம்பர கூட்டுப் பெருவிழா நன்றி திருப்பலியும், அதனை தொடா்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றது.

முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற பக்தா்கள் அறிவுறுத்தப்பட்டதோடு, ஆண்டுதோறும் 10 நாள்கள் நடத்தப்படும் திருவிழா நிகழாண்டில் 5 நாள்களாக குறைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.