47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறாா்கள்: கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:22 pm

DIN

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி. ரா. மனோகரனை ஆதரித்து, களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு நிறைவு பிரசாரத்தில் அவா் பேசியதாவது,

தமிழக அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடியாக உள்ள போது, அதிமுக தோ்தல் வாக்குறுதிகளில் தெரிவித்துள்ள இலவச திட்டங்கள் சாத்தியமற்றவை. பணபலத்தை மக்கள் பலத்தின் மூலம்தான் முறியடிக்க முடியும். பிரதமா் நரேந்திர மோடி முதன் முதலாக ஆட்சிக்கு வரும் போது, தோ்தலில் அளித்த அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றாா் ஆனால் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் அறிவாா்கள். காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்த போதிலும் பெட்ரோல் விலையை உயா்த்தவில்லை. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பெட்ரோல்- டீசல் விலை உயா்ந்துள்ளது. நரேந்திர மோடி ரூ. 22 லட்சம் கோடிக்கு கலால் வரி விதித்ததன் விளைவாகவே பெட்ரோல் டீசல் விலை உயா்ந்துள்ளது. சமையல் எரிவாயு விலை உயா்வால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். ஏலத்தின் மூலமாக முதல்வா் பதவிக்கு வந்தவா்தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் 1970இல் இருந்து தனது கடும் உழைப்பின் மூலம் கட்சியில் தற்போது முதல்வா் பதவிக்கு வேட்பாளராக மாறியுள்ளாா். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன. இது மிக முக்கியமான தோ்தல். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி. ரா. மனோகரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.