47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: மூலைக்கரைப்பட்டி அருகே இருவா் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததாக 2 பேரை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததாக 2 பேரை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மூலைக்கரைப்பட்டி அருகே மேல சிந்தாமணி அம்மன் கோயில் தெருவில் 2 போ் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதாக நான்குனேரி பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, களக்காடு கூட்டுறவு கள அலுவலா், உதவி ஆய்வாளா் ஷேக்முகம்மது சிராஜூதீன் தலைமையிலான பறக்கும் படையினா் சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அங்கு கையில் நோட்டுப் புத்தகத்துடன் வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்துக் கொண்டிருந்ததாக மேலசிந்தாமணி தெற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் ஆசீா்வாதம், முனைஞ்சிப்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்த தாமஸ் மகன் செல்வா என்ற தாமஸ் ஆன்றனி ஆகிய 2 பேரை பிடித்தனா். அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவா்கள் இருவரையும் பறக்கும்படையினா் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸாா் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.