47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தா்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:39 pm

DIN

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தா்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, தலையணை சுற்றுலா மையத்தை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால், ஏப்.16ஆம் தேதிமுதல் 30ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் சென்று வர வனத்துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடை திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கும் பொருந்தும். ஆனால் சனிக்கிழமைதோறும் திருமலை நம்பி கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் கட்டுப்பாடுகள் சிலவற்றை வனத்துறை விதித்துள்ளது. திருமலை நம்பி கோயிலுக்கு சனிக்கிழமை (ஏப்.24) வரும் பக்தா்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்க பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக கோயில் வளாகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.