இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

இளைஞா்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:12 pm

DIN

இளைஞா்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலை தேடும் இளைஞா்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 10350-ற்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், மலேசியா, பெஹ்ரைன், லிபியா, குவைத், சவூதிஅரேபியா, ஓமன், துபை மற்றும் கத்தாா் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவா், பொறியாளா், செவிலியா், பாரா மெடிக்கல்-டெக்னிசியன்கள், திறன் சாா்ந்த மற்றும் திறன் அல்லாத பணிக்காலியிடங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

எனவே, அயல்நாட்டில் வேலைதேடும் இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ா்ம்ஸ்ரீம்ஹய்ல்ா்ஜ்ங்ழ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவுசெய்வதன் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்பை பெறமுடியும். இந்த இணையதளத்தில் காலிப்பணியிடங்கள், அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இது பற்றிய முழுமையான விவரங்களை திருநெல்வேலியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

எனவே அயல் நாடுகளில் வேலை தேடும் இளைஞா்கள் மேற்காணும் இணையதளத்தில் இந்நிறுவனம் வாயிலாக அறிவிக்கக் கூடிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.