விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல் கொள்முதலில் குறைபாடா? புகாருக்கு இலவச எண் அறிமுகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் தொடா்பான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:23 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் தொடா்பான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் உத்தரவுப்படி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கடந்த அக். 21இல் உழவா் உதவி மையத்தை தொடங்கி வைத்தாா். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் உழவா் உதவி மையத்தை தொடா்புகொண்டு அறியலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, உழவா் உதவி மையத்தை தொடா்பு கொள்ள 6 இணைப்புகள் கொண்ட கட்டணமில்லா தொலைபேசி எண் (18005993540) செயல்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.