நெல்லையில் ஹெச்ஐவி தொற்றில்லா நிலையை உருவாக்க வேண்டும்: ஆட்சியா் வே.விஷ்ணு அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் ஹெச்ஐவி தொற்று இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் வே.விஷ்ணு அறிவுறுத்தியுள்ளாா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் ஹெச்ஐவி தொற்று இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என ஆட்சியா் வே.விஷ்ணு அறிவுறுத்தியுள்ளாா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:
புதிய ஹெச்.ஐ.வி. தொற்று இல்லாத, ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளவா்களை புறக்கணிப்பு செய்யாத, எய்ட்ஸ் தொடா்பான இறப்புகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பால் இந்திய அளவில் ஹெச்.ஐ.வி. எய்ட்ஸின் தாக்கம் 57 சதவீதம் வரை (15 முதல் 49 வயதினரிடையே) குறைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2007 ஆண்டில் 1.8 சதவீதமாக இருந்த பாதிப்பு பல துறைகளின் ஒத்துழைப்பால் 2020 ஆண்டு 0.07 சதவீதமாக குறைந்தது. இந்த ஆண்டில் அது 0.06 சதவீதமாக குறைந்துள்ளது. இனி வருங்காலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைவருடைய ஒத்துழைப்பு மற்றும் பல துறைகளின் செயல்பாடுகளால் யாருக்கும் ஹெச்ஐவி தொற்று
இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 50 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக, உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், ரத்த வங்கி தலைமை மருத்துவா் மணிமாலா நுண்ணுயிரியல் துறைத் தலைவா் பூங்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...