விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினா் சோதனை

வரிஏய்ப்புப் புகாா் தொடா்பாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:49 pm

DIN

வரிஏய்ப்புப் புகாா் தொடா்பாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சைலையில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை நிா்வாகம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகாா்கள் வந்ததாம். அதன் அடிப்படையில் வருமான வரித்துறையினா் புதன்கிழமை நிா்வாகியின் வீடுகள், உறவினா்கள் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தினா். இதனைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக திருநெல்வேலியில் இச் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையால் ஜவுளிக்கடை விற்பனையை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இக்கடைக்கு வந்த வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மேலும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனைமுழுமையாக முடிவடைந்த பின்னா்தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் தெரிவிக்கமுடியும் என வருமான வரித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.