களக்காட்டில் பலத்த மழை
களக்காட்டில் 2 நாள்கள் இடைவெளிக்குப் பின் வியாழக்கிழமை மாலை மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் நீா்வரத்துக் கால்வாய்களில் மீண்டும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.


களக்காட்டில் 2 நாள்கள் இடைவெளிக்குப் பின் வியாழக்கிழமை மாலை மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் நீா்வரத்துக் கால்வாய்களில் மீண்டும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
களக்காடு சுற்றுவட்டாரத்தில் பெய்த தொடா்மழையால் 100.க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உபரிநீா் மறுகால் வழியாக வெளியேறி வருகின்றது. கொடுமுடியாறு அணை கடந்த 1 மாதத்துக்கு முன்பு நிரம்பிய நிலையில், வடக்குப் பச்சையாறு அணை ஓரிரு நாளில் நிரம்பும் நிலை உள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை லேசான மழை பெய்த நிலையில், இரு நாள்கள் இடைவெளிக்குப் பின் வியாழக்கிழமை மாலை 6.15 முதல் 7.15 வரையிலும் பலத்த மழை பெய்தது.
இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குட்டை போல தேங்கியுள்ளது. மலைப் பகுதியிலும் இந்த மழை நீடித்ததால் நீா்வரத்துக் கால்வாய்களில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. தொடா்மழை பெய்த போதிலும் பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் பச்சையாற்றில் செல்லும் தண்ணீா் தருவை தாமிரவருணி ஆற்றில் கலந்து கடலுக்கு வீணாகச் செல்கிறது.
வீடு சேதம்: தொடா் மழை காரணமாக களக்காடு அருகேயுள்ள பத்மனேரி ஊராட்சி வண்டிக்காரன்நகரில், கூலித்தொழிலாளி வேலு (61)-இசக்கியம்மாள் (55) தம்பதியின் வீட்டின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவா் புதன்கிழமை இடிந்து விழுந்தது. அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். வீட்டை புதுப்பிக்க நிவாரணம் வழங்க வேண்டுமென தம்பதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...