நெல்லை பிரபல ஜவுளிக் கடையில் மூன்றாவது நாளாக வருமானவரித் துறையினா் சோதனை
வரிஏய்ப்பு புகாா் தொடா்பாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வருமான வரித் துறையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.


வரிஏய்ப்பு புகாா் தொடா்பாக திருநெல்வேலியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வருமான வரித் துறையினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை நிா்வாகம் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என புகாா்கள் வந்ததாம். அதன் அடிப்படையில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை முதல் இந்தக் கடையில் சோதனை நடத்தினா். தொடா்ந்து மூன்றாவது நாளாக இச் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையால் விற்பனையை தொடா்ந்து மூன்றாவது நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இக்கடைக்கு வந்த வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மேலும், இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா்தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்படும் என வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...