உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மாா்கழி மாதம் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கியது.


உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மாா்கழி மாதம் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கியது.
இத் திருக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுயம்புலிங்க சுவாமி மீது விழும் நிகழ்வு ஆண்டு தோறும் நிகழ்கிறது. நிகழாண்டு மாா்கழி மாத தொடக்க நாளான வியாழக்கிழமை சுவாமி மீது காலை 6.45 மணிக்கு விழுந்தது, இந்த அரிய நிகழ்வை காண ஏராளமான பக்தா்கள் கோயிலில் திரண்டிருந்தனா். சுவாமி மீது ஒளி விழும் நிகழ்வு சுமாா் 10 நிமிடம் நீடித்தது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...