எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேலப்பாளையத்தில் மகனைக் கொலை செய்த தந்தை கைது

மேலப்பாளையத்தில் கல்லால் தாக்கி மகனைக் கொன்றதாக அவரது தந்தையை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :27 டிசம்பர் 2021, 5:52 am

DIN

மேலப்பாளையத்தில் கல்லால் தாக்கி மகனைக் கொன்றதாக அவரது தந்தையை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் ஆமீன் புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா மகன் அப்துல் ரகுமான் (27). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். மது அருந்தும் பழக்கம் காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்து பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டாராம்.

அதன் பின் தூங்கச் சென்ற அப்துல் ரகுமானை, அவரது தந்தை அப்துல்லா வீட்டிலிருந்த கிரைண்டர் குழவி கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்துல்லாவை திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.