தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஞ்சாவூரில் நட்சத்திர தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

தஞ்சாவூரில் அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்த நட்சத்திர தங்கும் விடுதிக்கு திங்கள்கிழமை காலை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

News image
தஞ்சாவூரில் திங்கள்கிழமை காலை சீல் வைக்கப்பட்ட நட்சத்திர தங்கும் விடுதி.
Updated On :27 டிசம்பர் 2021, 5:25 am

DIN

தஞ்சாவூரில் அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்த நட்சத்திர தங்கும் விடுதிக்கு திங்கள்கிழமை காலை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

தஞ்சாவூரில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு 1995-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகப் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது தஞ்சாவூரில் போதுமான அளவுக்கு நட்சத்திர தங்கும் விடுதிகள் இல்லை. இதனால், தனியார் நட்சத்திர தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு அரசுத் தரப்பில் சலுகைகள் வழங்கப்பட்டது. 

Story image

இதன் அடிப்படையில் 1994, ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே அரசு நிலத்தில் 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பி. செல்வராஜூக்கு நட்சத்திர தங்கும் விடுதிக் (டெம்பிள் டவர்) கட்ட ஒரு ஏக்கர் 6,169 சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்த நட்சத்திர தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. 

Story image

இதனிடையே அரசு அனுமதியின்றி ஒப்பந்தத்தை மீறி எம். வெங்கடாச்சலம் மற்றும் எம். குமாருக்கு செல்வராஜ் உள் வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருவது அலுவலர்களின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், முறையாக குத்தகை செலுத்தப்படாததால் ரூ.12 கோடி நிலுவை உள்ளது. இதுகுறித்து தங்கும் விடுதி நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை. 

Story image

இதனால், 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த இடத்தை ஒப்படைக்குமாறு வருவாய் துறை சார்பில் நீதிமன்றம் மூலம் 2019-ஆம் ஆண்டு  நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் நட்சத்திர தங்கும் விடுதி நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காததால், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் ஏராளமான காவல் துறையினரின் பாதுகாப்புடன் திங்கள்கிழமை காலை சீல் வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.