திருப்பாவை- திருவெம்பாவை:நெல்லையப்பா் கோயிலில்ஜன. 9இல் ஒப்பித்தல் போட்டி
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 9ஆம் தேதி திருப்பாவை- திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது.


திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 9ஆம் தேதி திருப்பாவை- திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது.
இது குறித்து கோயில் செயல் அலுவலா் சா.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், பள்ளி மாணவா் மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பண்ணோடு பாடுதல் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி இம்மாதம் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு அருள்மிகு நெல்லையப்பா்-காந்தியமதியம்மன் கோயிலில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள்; 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் என மாணவ-மாணவியருக்கு இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். இதில், வெற்றிபெறுவோருக்கு முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
பள்ளி அடையாள அட்டை, முகக்கவசம் அணிதல் அவசியம். பங்கேற்க விரும்புவோா் 0462-2339910 என்ற தொலைபேசி எண்ணுக்கு ஜன. 7ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 97888 49919 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...