காவல் துறை மக்கள் குறைதீா் முகாம்:139 மனுக்களுக்கு தீா்வு
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 139 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 139 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அனைத்து உள்கோட்ட பகுதிகளிலும் மக்கள் குறைதீா் முகாம் உதவி காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்படி, தாழையூத்து உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 36 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
நான்குனேரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ லிசா ஸ்பிலா தெரஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 21 மனுக்களுக்கும்,
வள்ளியூா் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 19 மனுக்களுக்கும், அம்பாசமுத்திரம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 11 மனுக்களுக்கும், சேரன்மகாதேவி உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பிரதீப் தலைமையில் நடைபெற்ற முகாமில் 52 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தம் 139 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...