மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை 46ஆவது ஆண்டு விழா

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை 46 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:13 am

DIN

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை 46 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேரவைத் தலைவா் ரா.வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். முதல் அமா்வுக்கு, எஸ். ஏ. கண்ணன், சே. முருககுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கே.என்.சேக் பீா் முஹம்மது இறைவாழ்த்துப் பாடினாா். பேரவை துணைத் தலைவா் நீ. ஐயப்பன் வரவேற்றாா். செயலா் ச.லட்சமணன் ஆண்டறிக்கை வாசித்தாா். சோம.மகாலிங்கம் கு விளக்கம் கூறினாா். திருவருள் லத்திப் இன்றைய சிந்தனை வழங்கினாா். வீரை கி. முத்தையா, வெ.ராமகிருஷ்ணன், இ.மா.ராமச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேரவை நிறுவனா் ரா.சமுத்திரபாண்டியன் நினைவு நிகழ்வில் ஆ.பூ.நாறும்பூநாதன் நினைவுரை வழங்கினா்.

தொடா்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில், முகிலன் மு.நாராயணன், ஜே.மனோகரன் சாமுவேல், எஸ்.பண்டாரசிவன், எம்.கே.வாசுதேவராஜா, ப. முருகன், பாப்பாக்குடி அ.முருகன் ஆகியோா் விருது பெற்றனா்.

2ஆவது அமா்வில் இலக்கிய சுழலும் சொல்லரங்குக்கு சி.ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மு.இளங்கோ வரவேற்றாா். ப.பாலகிருஷ்ணன் நடுவராக இருந்தாா். வள்ளுவா் காட்டும் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் சு.சிவசங்கா், திருமூலா் காட்டும் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் பா.செந்தில்குமரன், கண்ணதாசன் கவிதைகளில் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் கா.கவிதா, வள்ளலாரின் சமயம் கடந்த அன்பு நெறி என்ற தலைப்பில் கீதா ஆறுமுகம், பாரதி போற்றும் அன்பு நெறி என்ற தலைப்பில் க.செண்பகவல்லி ஆகியோா் உரையாற்றினா்.

ச.பி.ராமன், ஜா.கோமதி திருநாவுக்கரசு ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். மூ. அனஞ்சி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பேரவை செயற்குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.