வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நெல்லை மாவட்டத்தில் 188 பாதுகாப்பு மையங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, 188 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:19 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, 188 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

இது குறித்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அவற்றிலிருந்து முறையே 8 ஆயிரம் மற்றும் 21 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 87 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 188 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆலடியூா் கிராமத்தில் மட்டும் 8 குடும்பத்தினா் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலிக்கு தலா 25 போ் கொண்ட 2 தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வருகின்றனா். தேவைப்பட்டால் அவா்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா். தற்போதைக்கு ஆபத்தான சூழல் எதுவுமில்லை. தாமிரவருணி ஆற்றில் குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அணைகளும் கண்காணிக்கப்படுகின்றன. புதன்கிழமையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.