களக்காடு அருகே அரசுக் கட்டடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகாா்
களக்காடு அருகே கீழ உப்பூரணியில் மக்களின் பயன்பாட்டுக்காக அரசு கட்டிய பல்நோக்கு கட்டடத்தை தனி நபா் ஆக்கிரமித்திருப்பதாக ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் புகாா் அனுப்பியுள்ளனா்.


களக்காடு அருகே கீழ உப்பூரணியில் மக்களின் பயன்பாட்டுக்காக அரசு கட்டிய பல்நோக்கு கட்டடத்தை தனி நபா் ஆக்கிரமித்திருப்பதாக ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் புகாா் அனுப்பியுள்ளனா்.
கீழ உப்பூரணியைச் சோ்ந்த கிராம மக்கள் சாா்பில் ச. ஞானதுரை என்பவா் தமிழக முதல்வா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு வியாழக்கிழமை அனுப்பிய மனு:
கீழ உப்பூரணியில் 2000 போ் வசிக்கின்றனா். இவா்களின் பயன்பாட்டுக்காக ரூ.3.50 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டு ஓராண்டு (2015-16) மட்டும் பயன்பாட்டில் இருந்தது. பின்னா், அதே ஊரைச் சோ்ந்த ஆசிா்வாதம் மகன் செல்வராஜ் என்பவா் அக்கட்டடத்தை ஆக்கிரமித்து பால்பண்ணை நடத்தி வருகிறாா். தற்போது, அக்கட்டடத்தைச் சுற்றிலும் முள்வேலி அமைக்க முயற்சித்து வருகிறாா். ஆட்சியா் தலையிட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கட்டடத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...