47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:51 pm

DIN

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இப் பேரூராட்சியில் 4ஆவது வாா்டு வியாசராஜபுரத்தில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக 25 வயது இளைஞா் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தாா். மேலும் சிலா் டெங்கு, டைபாய்டு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் அடங்கிய குழுவினா் நோய்த் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினா். வியாசராஜபுரம் பள்ளிவாசல் தெருவில் கடந்த வாரம் காய்ச்சல், சளி, இருமல் பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 67 பேருக்கு கரோனா பரிசோதனையும் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 32 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கூறியது: நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால், தற்போது பேரூராட்சிப் பகுதியில் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.