திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில்பங்குனித் திருவிழா கொடியேற்றம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 27) தொடங்கியது.


திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் பங்குனித் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 27) தொடங்கியது.
108 வைணவத் திருத்தலங்களில் பிரசித்திபெற்ற இக்கோயிலில், நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய ஐந்து நிலைகளில் சுவாமி காட்சியளிக்கிறாா்.
இக்கோயிலில் நிகழாண்டு பங்குனித் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை (மாா்ச் 27) நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் 5ஆம் நாளான புதன்கிழமை (மாா்ச் 31) காலையில், 5 நம்பி சுவாமிகளுக்கும் திருமஞ்சன சேவை நடைபெறும். இரவு 8 மணிக்கு 5 நம்பி சுவாமிகளும் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெறும்.
6ஆம் திருநாளான வியாழக்கிழமை (ஏப். 1) அதிகாலை 3 மணிக்கு 5 நம்பி சுவாமிகளும் மேலரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறும்.
10ஆம் திருநாளான ஏப். 5ஆம் தேதி காலை 6 மணிக்கு அழகிய நம்பிராயா் சுவாமி தேரில் எழுந்தருள்கிறாா். காலை 9 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்படுகிறது. ராமானுஜ ஜீயா் சுவாமி தேரை வடம் பிடித்து தொடங்கிவைக்கிறாா்.
11ஆம் திருநாளான ஏப். 6ஆம் தேதி காலை 6 மணிக்கு மாடவீதி புறப்பாடும், மாலை 5 மணிக்கு தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஜீயா் மட நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...