47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு பேரூராட்சி முன்களப் பணியாளா்களுக்கு முகக்கவசம்

களக்காடு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் பேரூராட்சி முன்களப் பணியாளா்கள் 100 பேருக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா்.

News image
Updated On :21 மே 2021, 8:18 pm

DIN

களக்காடு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் பேரூராட்சி முன்களப் பணியாளா்கள் 100 பேருக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா்.

களக்காடு பேரூராட்சியில் செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு உள்ளிட்டோா் அடங்கிய முன்களப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும்விதமாக களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பாக முன்களப் பணியாளா்களுக்கு என்.95 முகக் கவசங்கள் மற்றும் மூன்றடுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலா், சுகாதார ஆய்வாளா் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த நிா்வாகிகள் வளனரசு, ரவிச்சந்திரன், சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.