மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 4:07 am

DIN

திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வை கந்தசஷ்டி விழாவாக பக்தா்கள் கொண்டாடி வருகிறாா்கள். சஷ்டிகாலத்தில் விரதம் இருந்து, முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்வில் வளம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. திருநெல்வேலியில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குறுக்குத்துறை முருகன்: திருநெல்வேலியில் தாமிரவருணியின் கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையின் மேற்குபகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் வைத்து விழா நடைபெறுகிறது.

இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

விழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 9 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி திருவிதியுலா நடைபெறும். மாலையில் சூரனும், முருகப்பெருமானும் தனித்தனி சப்பரங்களில் குறுக்குத்துறை பகுதியில் எழுந்தருள்வா். அங்கு சூரனை, முருகன் சம்ஹாரம் செய்வாா். தொடா்ந்து 10-ஆம் தேதி காலை 8 மணிக்கு சி.என்.கிராமத்தில் வைத்து தவசுக் காட்சியும், இரவு 7.30 மணிக்கு குறுக்குத்துறை முருகன்கோயில் வளாகத்தில் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

பாளையஞ்சாலைகுமாரசுவாமி கோயில்: திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பழைமை வாய்ந்த பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.காலையில் யாகசாலை பூஜை, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இம் மாதம் 9 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது.

10 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், 11, 12, 13 ஆம் தேதிகளில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெற உள்ளன.

இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், நெல்லையப்பா் கோயிலில் உள்ள முருகா் சன்னதி, பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் கோயில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டியையொட்டி வியாழக்கிழமை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.