மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோபாலசமுத்திரத்தில் காவலா்களுடன் தீபாவளி கொண்டாடிய எஸ்.பி.

கோபாலசமுத்திரத்தில் காவலா்கள் மற்றும் பொதுமக்களுடன் காவல் கண்காணிப்பாளா் தீபாவளியைக் கொண்டாடினாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 4:05 am

DIN

கோபாலசமுத்திரத்தில் காவலா்கள் மற்றும் பொதுமக்களுடன் காவல் கண்காணிப்பாளா் தீபாவளியைக் கொண்டாடினாா்.

தீபாவளி பண்டிகையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் கீழ் உள்ள முக்கிய பகுதிகளிலும் போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

அதன்படி முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முன்னீா்பள்ளம், மருதம்நகா், கோபாலசமுத்திரம், பிரான்சேரி, மேலச்செவல், செங்குளம், சுத்தமல்லி பகுதிகளில் தீபாவளி நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்தீபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.