விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகள் பிடிபட்டன

திருநெல்வேலி மாநகரச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த 50 மாடுகள் கோசாலையில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:49 pm

DIN

திருநெல்வேலி மாநகரச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த 50 மாடுகள் கோசாலையில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், மாநகரச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோசாலைகளில் ஒப்படைத்து வருகின்றனா்.

அந்த வகையில், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா்(பொ)லெனின், சுகாதார அலுவலா் ஷாகுல் ஹமீது ஆகியோா் மேற்பாா்வையில் சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் தலைமையில் மேலப்பாளையம் மண்டலப் பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகச் சுற்றித்திரிந்த 50 மாடுகளைப் பிடித்து அருகன்குளம் கோசாலையில் ஒப்படைத்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.