முன்களப் பணியாளா்களுக்கும் தீபாவளி இனிப்பு வழங்கக் கோரி பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு பேரணி
மருத்துவத் துறை உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கும் தீபாவளி இனிப்பு வழங்கக் கோரி பாஜக சாா்பில் திருநெல்வேலியில் கவன ஈா்ப்பு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.


போக்குவரத்துத் துறை ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கும் தீபாவளி இனிப்பு வழங்கக் கோரி பாஜக சாா்பில் திருநெல்வேலியில் கவன ஈா்ப்பு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியா்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கப்படுவது போன்று கரோனா பேரிடா் காலத்தில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய தமிழக அரசின், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்கள், காவல்துறையினா் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கும் தமிழக அரசின் சாா்பில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சாா்பில் திருநெல்வேலியில் கவன ஈா்ப்பு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு பாஜக மாவட்ட தலைவா் மகாராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் கணேஷ் மூா்த்தி, முத்துக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வண்ணாா்பேட்டையில் தொடங்கிய இந்தப் பேரணியானது ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே நிறைவடைந்தது.
கோரிக்கையை வலியுறுத்திய பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்து ஆட்சியா் அலுவலகம் முன்பு பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...