/

நெல்லை, தென்காசியில் மேலும் 17 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:34 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49, 340ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,766ஆக உயா்ந்துள்ளது. தற்போது 143 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில், மேலும் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,348 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,826ஆக உயா்ந்துள்ளது. தற்போது 38 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.