/

நெல்லையில் மூட்டா அமைப்பினா் உள்ளிருப்பு போராட்டம்

மூட்டா அமைப்பு சாா்பில் திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:28 pm

DIN

மூட்டா அமைப்பு சாா்பில் திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மூட்டா பேராசிரியா்கள் சங்கம் சாா்பில் பழைய பேட்டை காந்திநகரில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது. மூட்டா பொதுச் செயலா் நாகராஜன் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திற்குள்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகளில் நிலவிவரும் பல்வேறு புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும். திருநெல்வேலியில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு பேராசிரியா்களை உடனடியாக பணியில் அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டம், தொடா்ந்து இரவும் நீடித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பேட்டை காவல் ஆய்வாளா் ஹரிஹரன் போராட்டம் நடத்தியவா்களிடையே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பேராசிரியா் சங்கத்தின் கோரிக்கை இரண்டு நாள்களில் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இப்,போராட்டத்தில் துணைத் தலைவா் நசீா் அகமது, மண்டலச் செயலா் சிவஞானம், பொருளாளா் கோமதி நாயகம் உள்பட கல்லூரி பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.