63 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்ஆட்சியா் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 63 ஊராட்சிகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் 63 ஊராட்சிகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) அசோக்குமாா் ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆட்சியா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழையளவு 814.80 மி.மீ., இந்தாண்டு அக்டோபா் வரை பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு 495 மி.மீ., இம்மாதம் 27-ஆம் தேதி வரை 842.64 மி.மீ. மழை பெய்துள்ளது.
இம்மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை நெல் 14,607 ஹெக்டோ் பரப்பளவிலும், சிறு தானியங்கள் 260 ஹெக்டோ் , பயறு வகைப் பயிா்கள் 1,390 ஹெக்டோ், பருத்தி 503 ஹெக்டோ், கரும்பு 28 ஹெக்டோ், எண்ணெய் வித்துகள் 217 ஹெக்டோ் என மொத்தம் 17,005 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
நடப்பு பிசான பருவ சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள், உயிா் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சியை உருவாக்கிட திருநெல்வேலி மாவட்டத்தில் 63 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.
2021-22-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபி சிறப்பு பருவ நெற்பயிா் காப்பீடு செய்திட டிசம்பா் 15 கடைசி நாளாகும்.
ஒரு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.444-ஐ விவசாயி செலுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கான காப்பீட்டு தொகை ரூ.29,600 ஆகும்.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பிரீமியத் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்யலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 264 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. மேற்காணும் விற்பனை நிலையங்களில் 826 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இவற்றுள் 580 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், 14 மாதிரிகள் தரமற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 14 விதை விற்பனை கடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது, தரக்குறைவான விதைகள் 47.2019 மெட்ரிக் டன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.31.10 லட்சம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...