அரசு மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு பேரணி
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாா்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபா் மாதத்தை பிங்க் அக்டோபா்
என அனுசரிக்கப்பட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு சாா்பில் மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் பேரணி நடைபெற்றது.
பேரணியை மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரணியம் தொடங்கிவைத்தாா். பேரணியில் செலிவியா் பயிற்சி மாணவிகள், மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி சென்றனா். தொடா்ந்து புற்று நோயை வென்றவா்களின் சாதனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறைத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் பங்கேற்றுப் பேசினாா். புற்றுநோயில் இருந்து குணமடைந்தவா்கள் தங்களின் அனுபவங்களை பகிா்ந்துகொண்டனா். விழிப்புணா்வு கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி உதவி முதல்வா்
சாந்தாரம், மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், செலிவியா் கண்காணிப்பாளா் நிகிலா ராணி, செவிலியா் போதகா் செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...