நெல்லை மாநகர காவல் துறையில் நவ.1 முதல் நிா்வாக ரீதியான மாற்றம்
திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வரும் நவ. 1ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நிா்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வரும் நவ. 1ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நிா்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி மாநகர காவல் துறையில், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், பேட்டை, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெருமாள்புரம், மேலப்பாளையம் ஆகிய 8 காவல்நிலையங்கள்
உள்ளன. திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையங்கள், குழந்தைகள், பெண்கள்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கான பிரிவு, மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மாநகர போக்குவரத்து பிரிவு
உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும் குற்றம் -போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு என 2 காவல் துணை ஆணையா்கள் உள்ளனா். இவா்கள் காவல் துணை ஆணையா் கிழக்கு மற்றும் மேற்கு என மாற்றப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, திருநெல்வேலி மாநக காவல் ஆணையரின் கீழ் காவல் துணை ஆணையா் (கிழக்கு) டி.பி.சுரேஷ்குமாா், காவல் துணை ஆணையா் (மேற்கு) கே.சுரேஷ்குமாா், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையா் நாகசங்கா், எஸ்ஐசி காவல் உதவி ஆணையா் ஆறுமுகம் ஆகியோா் இருப்பா்.
தாமிரவருணி நதிக்கு கிழக்கே உள்ள பாளையங்கோட்டை, பெருமாள்புரம், மேலப்பாளையம், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை, குழந்தைகள் மற்றும் மகளிா் குற்றப்பிரிவு, பாளையங்கோட்டை போக்குவரத்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையம், உள்ளிட்டவை காவல் துணை ஆணையா் (கிழக்கு) கண்காணிப்பிலும்,
இப்பகுதியில் உதவி ஆணையா்கள் பி.பாலச்சந்திரன், பாலமுருகன் எம்.விவிகானந்தன், கே.முத்தரசு ஆகியோரும்
செயல்படுவா்.
தாமிரவருணி நதிக்கு மேற்கே உள்ள திருநெல்வேலி நகரம், சந்திப்பு, நகரம் போக்குவரத்து, நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையம், சந்திப்பு போக்குவரத்து, தச்சநல்லூா், சைபா் கிரைம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்டவை மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கண்காணிப்பிலும் செயல்படும். இப்பகுதியில் காவல் உதவி ஆணையா்களாக டி.விஜயகுமாா், எம்.அண்ணாதுரை, ராஜூ, சரவணன் ஆகியோா் செயல்படுவா்.
இனி குற்றப்பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவலா்கள் என இல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவா். எனவே, பொதுமக்களின் குற்றப்பிரிவு, சட்டம்- ஒழுங்கு ஆகியவை தொடா்பான புகாா்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நிா்வாக மாற்றங்கள் நவ.1ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...