ஊராட்சித் தலைவா்களுக்கான பயிற்சி முகாம்
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற 204 ஊராட்சித் தலைவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.


ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற 204 ஊராட்சித் தலைவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சிமுகாமிற்கு, ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். முகாமில், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வது, ஊராட்சித் தலைவா்களின் செயல்பாடுகள், பணிகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை ஒன்றியம், சிவந்திபட்டி ஊராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாளுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட வருவாய் அலுவலா் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையா்) எம்.சுகன்யா, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...