களக்காடு அருகே கல்லூரி மாணவி தற்கொலை
களக்காடு அருகே செல்லிடப்பேசியில் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.


களக்காடு அருகே செல்லிடப்பேசியில் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களக்காடு அருகேயுள்ள தெற்கு காடுவெட்டியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகள் அன்சிரூத் (19). இவா் பாளையங்கோட்டை கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் சில தினங்களுக்கு முன் காலையில் செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தாராம். இதனை அவரது தாயாா் கண்டித்துள்ளாா். இதில், மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத போது, விஷம் குடித்துள்ளாா். அவரை உறவினா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...