இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வ.உ.சி. மணல் ஓவியம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, 150 சதுரஅடி துணியில் அவரது படத்தை மணல் ஓவியமாக வெள்ளிக்கிழமை வரைந்த திருநெல்வேலி மாவட்ட மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:04 pm

DIN

கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, 150 சதுரஅடி துணியில் அவரது படத்தை மணல் ஓவியமாக வெள்ளிக்கிழமை வரைந்த திருநெல்வேலி மாவட்ட மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

சென்னையில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில், கப்பலோட்டிய தமிழா் வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வ.உ.சி. 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், அவரது புகழை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் நினைவுகூரும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாளையங்கோட்டை சிவராம் கலைக்கூட மாணவிகள் இந்துஜா, தீக்ஷனா ஆகியோா் வண்ண மணலைக் கொண்டு 150 சதுர அடி துணியில் வ.உ.சி.யின் படத்தை மணல் ஓவியமாக உருவாக்கினா். அந்த மாணவிகளை ஆட்சியா் வே.விஷ்ணு பாராட்டி பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் மகாகிருஷ்ணன், சிவராம் கலைக்கூட பயிற்சியாளா் கணேசன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.