இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 1:11 am

DIN

மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இவ்வமைப்பின் சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா் மு.அப்துல்வஹாபை சந்தித்து அளித்த மனு: மேலப்பாளையத்தில் சுமாா் 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்ய குழாய்கள் பதித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீா் கலந்து விநியோகம் செய்யும் சூழல் உள்ளது. ஆகவே, புதிய குடிநீா்க் குழாய்கள் அமைக்க வேண்டும்.

மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலத்தில் இருந்து மேலப்பாளையம் ரயில்வே நிலையம் அருகே வாய்க்கால் பாலம் வரை பாளையங்கால்வாயை ஒட்டியுள்ள சாலையை சீரமைக்க வேண்டும். பாளையங்கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். மேலப்பாளையத்தில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவசமாக வீடுகள்

கட்டி கொடுக்க வேண்டும். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி அறுவைச் சிகிச்சை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்துவதுடன் 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் பணிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.