இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நெல்லையில் பெட்ரோலிய டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்

திருநெல்வேலியில் பெட்ரோலிய டேங்கா் லாரி ஓட்டுநா்கள் வியாழக்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:28 pm

DIN

திருநெல்வேலியில் பெட்ரோலிய டேங்கா் லாரி ஓட்டுநா்கள் வியாழக்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி தச்சநல்லூரில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லப்படுகின்றன.

மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் திருெல்வேலி நகரத்திலுள்ள நான்கு ரதவீதிகள் மற்றும் மாநகரப் பகுதிகளில் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தச்சநல்லூரில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சேமிப்பு கிடங்கில் இருந்து செல்லும் 50-க்கும் மேற்பட்ட டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலை

நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாலையின் இரு புறங்களிலும் லாரிகள் அணிவகுத்து நின்றன.

தச்சநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் வனசுந்தா், பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை

நடத்தினா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 2 மணி நேரம் பெட்ரோலிய பொருள்களை ஏற்றிச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.