இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பெண்ணிடம் நகை கேட்டு துன்புறுத்திய கணவருக்கு சிறை

திருநெல்வேலியில் பெண்ணிடம் நகை, பணம் கேட்டு துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:30 pm

DIN

திருநெல்வேலியில் பெண்ணிடம் நகை, பணம் கேட்டு துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள். இவரது கணவா் சின்னதுரை, அவரது குடும்பத்தினா்

பேச்சியம்மாளிடம் பணம், நகை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 2013இல் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சின்னதுரைக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் மற்றும் பேச்சியம்மாளுக்கு சொந்தமான 20 பவுன் தங்க நகைகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.