இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பாதாளச்சாக்கடை பணி: சிந்துபூந்துறை மயான சாலையில் 20 முதல் போக்குவரத்து மாற்றம்

பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெறுவதையடுத்து திருநெல்வேலி சிந்துபூந்துறை மயான சாலை பகுதியில் 20ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளதாக

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:27 pm

DIN

பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெறுவதையடுத்து திருநெல்வேலி சிந்துபூந்துறை மயான சாலை பகுதியில் 20ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இரண்டு பகுதிகளாக நடைபெற்று வருகிறது. தாமிரவருணி ஆற்றுக்கு மேற்கே உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும், திருநெல்வேலி, தச்சநல்லூா் மண்டலங்களில் 26.07.2018 முதல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தச்சநல்லூா் மண்டலம் வாா்டு எண் : 5-க்கு உள்பட்ட சிந்துபூந்துறை எரியூட்டும் மயான சாலையில் வருகின்ற இம்மாதம் 20 ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 20 ஆம் தேதி வரை பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் உடையாா்பட்டி பகுதியிலிருந்து தாமிரவருணி ஆற்றுக்கு வரும் 2 தெருக்கள் மற்றும் வடக்கு புறவழிச்சாலையில் இருந்து ஆற்றுக்கு வரும் 2 தெருக்களை பயன்படுத்தி தெற்கு நோக்கி மயான சாலைக்கு வரும் வழிகள் தடை செய்யப்படுகின்றன.

அதற்கு பதிலாக எரியூட்டும் மயானத்தை அடைவதற்கு சந்திப்புப் பகுதியிலிருந்து சாலைத் தெரு வழியாக சிந்துபூந்துறை நடுத்தெரு மற்றும் செல்விநகா் பகுதியை பயன்படுத்தி தகனம் செய்யும் வண்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.