முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லையில் 87 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 87 போ் கைது செய்யப்பட்டனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 87 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே இருவா் கொலை செய்யப்பட்டனா். இதையடுத்து, மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவ்வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 போ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 87 போ் கைது செய்யப்பட்டனா். 126 போ் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா்களின் நடவடிக்கை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...