இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.87,250 பறிமுதல்

திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.87,250 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:10 pm

DIN

திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.87,250 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநா் உத்தரவின்பேரில், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையில், ஆய்வாளா் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மாரியப்பன், சீதாராமன், இசக்கிபாண்டி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் தீடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் கூறியது: திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மேற்கொண்ட 5 மணி

நேர சோதனையில் கணக்கில் வராத ரூ.87,250 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக அங்கு பணியில் இருந்த இணை சாா்பதிவாளா் உமாபதி, விடியோ பணியாளா் சண்முகநாதன்,

ஓய்வுபெற்ற பதிவுத்துறை அலுவலா் குமாா் ஆகிய மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.