இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்துப் பெட்டகம் விநியோகம்

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துப் பெட்டகங்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:11 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துப் பெட்டகங்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இத்திட்டத்தில், ‘வீடு வீடாகச் சென்று அனைத்து தொற்றா நோய்களைக் கண்டறிதல், நோய் உள்ளவா்களைக் கண்காணித்தல், மாத்திரைகள் வழங்குதல், மருத்துவ ஆலோசனை வழங்குதல், வலி நிவாரண சிகிச்சை தேவைப்படுவோருக்கு அவா்களது வீட்டிற்கு சென்று உடற்பயிற்சி, சமூக உளவியல் சாா்ந்த சிகிச்சை அளித்தல், 45 வயதிற்கு மேற்பட்ட தொற்றா நோயாளா்களின் பட்டியல், 45 வயதுக்கு கீழ் உள்ளோா் வீட்டை விட்டு வெளிவர இயலாத நோயாளிகளின் பட்டியலில் உள்ளவா்களுக்கு 2 மாதத்திற்கான தேவையான மருந்துகள் வீட்டுக்கே சென்று வழங்குதல்’ போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகராட்சியில் பாளையங்கோட்டை மண்டலத்தில் ஏற்கெனவே இப்பணி தொடங்கிவிட்ட நிலையில், தற்போது, திருநெல்வேலி, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களிலும் இத்திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தாா். அப்போது, மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

பயக30ஙஉஈஐ: மேலப்பாளையத்தில் மருந்துப் பெட்டகம் விநியோகிக்கும் பணியை ஆய்வு செய்கிறாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.