வாக்குகள் எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ள மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 12 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 59 போ், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 626 போ், 204 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 924 போ், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போ் 3,918 என மொத்தம் போ் போட்டியிடுகிறாா்கள்.
இத் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அக்டோபா் 12 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. களக்காடு ஊராட்சி ஒன்றிய வாக்குகள் திருக்குறுங்குடி டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் அடங்காரகுளம் எஸ்.ஏ.ராஜா கலைக் கல்லூரி வளாகத்திலும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் கள்ளிகுளம் டிடிஎம்என்எஸ் கல்லூரி வளாகத்திலும், நான்குனேரி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் விஜயநாராயணம் ரெக்ட் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்திலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய வாக்குகள் கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்பட உள்ளன.
இதேபோல, சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் இடைகால் மெரிட் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலும், மானூா் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்பட உள்ளன.
வாக்குஎண்ணும் மையங்களில் வேட்பாளா்களின் முகவா்கள் நிற்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் அறைக்குள் தடுப்புகள் அமைத்தல், கூடுதலாக மின்விளக்கு, மின்விசிறி பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள், முகவா்கள் வரிசையாக வந்து செல்லும் வழிகளில் தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணி முழுவதும் விடியோ பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் இரு தினங்களில் நிறைவு பெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...