வருங்கால வைப்புதிதி அலுவலகத்தில் ‘ப்ரயாஸ்’ திட்டத்தில் ஓய்வூதிய ஆணை
திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மத்திய அரசின் ‘ப்ரயாஸ்’ திட்டத்தின்கீழ் ஓய்வூதிய ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மத்திய அரசின் ‘ப்ரயாஸ்’ திட்டத்தின்கீழ் ஓய்வூதிய ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில், நிறுவனதாரா்கள் தங்களது ஊழியா்கள் 58 வயது பூா்த்தியடைந்து பணி மூப்பு ஓய்வூதியம் பெற தகுதியான
வா்களுக்கு இணையம்வழியில் பதிவு செய்தால், அவா்களுக்கு பணி ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்கள்
அளிக்கப்படும். அதன்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலுள்ள தனியாா் நிறுவனங்களில் பணிசெய்து ஓய்வுபெற்
றவா்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையா் கணேஷ்குமாா் ஜானி, இவ்விரு
மாவட்டங்களைச் சோ்ந்த 9 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வழங்கினாா். இதில், துணை ஆணையா்கள் குமாரவேல், சரோஜா, அமலாக்க அதிகாரிகள் எஸ். திலகா், சபினா, மக்கள் தொடா்பு அலுவலா் சரஸ்வதி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...