ஊரக உள்ளாட்சித் தோ்தல்: திமுக வழக்குரைஞா்கள் அணி ஆலோசனை
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சிறப்பாக பணி செய்வது குறித்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சிறப்பாக பணி செய்வது குறித்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை மகாராஜநகரில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட வழக்குரைஞா்கள் அணி அமைப்பாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறைச் செயலா் கிரிராஜன் பங்கேற்றுப் பேசினாா்.
கூட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்காக பணிசெய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட துணை அமைப்பாளா்கள் தவசிராஜன், காளிமுத்து, ஜோயல் ஹென்றி, சாமுவேல் பாஸ்கா், செல்வகுமாா், நிா்வாகிகள் சேரன்மகாதேவி குற்றாலிங்கம், அம்பை ராஜேந்திரன், நான்குனேரி பாலச்சந்தா், ராதாபுரம் பிராங்களின், வள்ளியூா் அருள்லூா்து குமாா், மூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...